பல்கலைக்கழகமானது தொழில் முன்னேற்றத்திற்காக தங்களது அறிவையும் திறனையும் உயர்த்திக்கொள்ள எதிர்பார்க்கும் இலங்கையர்களை வலுவூட்டுவதற்காக வடிவமைக்கப்பட்ட, பரவலாக பேசப்படும் அதன் MBA நிகழ்ச்சித்திட்டத்தின் அறிமுகத்துடன் பட்டப்பின் கற்கைகளை வழங்குவதில் பாரியதொரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட, SLTC MBA நிகழ்ச்சித்திட்டமானது கற்கைநெறி, செயற்றிட்ட அடிப்படையிலான கற்றல் அல்லது ஆய்வு மைய கற்கை என்பவற்றை உள்ளடக்கி, தங்களது கற்கைகளை பூர்த்திசெய்வதற்காக மாணவர்களிற்கு மூன்று தனிச்சிறப்பான வழிகளை வழங்கும், இலங்கையின் மிகவும் நெகிழ்வுத்தன்மைமிக்க நிகழ்ச்சித்திட்டமாகும்.
இம்முதன்மையான நிகழ்ச்சித்திட்டத்தின் துவக்கவிழாவானது கொழும்பு 01 இன் டிரேஸ் எக்ஸ்பேர்ட் சிட்டியில் அமைந்துள்ள SLTC பல்கலைக்கழக்கத்தின் கொழும்பு வளாகத்தில் இடம்பெற்ற உத்தியோகபூர்வ வைபவத்தில் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வானது பிரதம விருந்தினராக கலாநிதி. ரணில் சுகததாசவினால் மேன்மைப்படுத்தப்பட்டதுடன் SLTC இன் துணைவேந்தர்/ பிரதம நிறைவேற்றதிகாரியுமான சிரேஷ்ட பேராசிரியர், விரேஞ்ச கருணாரத்ன, மேலதிக செயலாளர் – கல்வி அமைச்சு (அரசசார்பற்ற உயர் கல்வி நிறுவனம்), திருமதி சந்திமா ஜானகி, SLTC பேரவை ஆளுகை குழு உறுப்பினர்கள், சிரேஷ்ட பேராசிரியர் டென்சில் ரோசா மற்றும் திரு. மங்கள யாப்பா மற்றும் SLTC பதிவாளர் கோசாம்பிகா தேவேந்திர ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.