1.6K
உள்ளங் கையில்
உப்பு வெச்சாலும்
உசுரு உள்ளவரை
உனக்கு நன்றியிருக்கணும்
உண்ண உணவுமில்லை
உடுத்த உடையுமில்லை
உருகிய நெஞ்சே
உனக்கு ஆறுதலாயிருந்தேன்
அறிவு கெட்டவளே
அலைய விட்டவளே..
ஆனந்தமாய் நீயிருக்க
அனாதையாய் நானிருக்கேன்
மாரி மழை
மறக்காமல் வந்திருச்சி
வாய்க்கால்
வரம்பும் உடைந்திருச்சி
நதி ஒரமாய்
நான் நின்றிருக்கேன்
வெள்ளமாய் நீ வந்து
என்னை இழுத்து செல்லு
-டி.எல். நஸீம் கிண்ணியா