வணிக வன பயிர் துறையில் முன்னோடியான ‘சதாஹரித’, ஐக்கிய அரபு இராச்சியத்தின் ‘அல்வீனா’ வாசனைத் திரவிய தயாரிப்பு நிறுவனத்துடன் உற்பத்திகளை ஆரம்பித்துள்ளது.
இலங்கையின் வணிக வனபயிர் துறையின் முன்னோடியாக திகழும் ‘சதாஹரித’ குழுமம் மற்றுமொரு பலமான நடவடிக்கையை முன்னெடுத்து அகர்வுட் தொடர்பான உற்பத்திகளை உலக சந்தையில் இணைக்கும் மற்றுமொரு நடவடிக்கையை அண்மையில் ஆரம்பித்துள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் மிகப்பெரிய வாசனைத் திரவிய தயாரிப்பு நிறுவனமான ‘அல்வீனா’ வாசனைத் திரவிய நிறுவனத்துடனேயே அந்த நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் பல தலைமுறைகளாக அனுபவத்தையும் பல வருட ஆய்வுகள் மற்றும் சோதனைகளின் மூலம் பெற்ற அறிவையும் கொண்ட ‘சதாஹரித’ குழுமத்தின் தலைவர் சதீஷ் நவரத்ன தலைமையில் 2002ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ‘சதாஹரித’ பெருந்தோட்ட நிறுவனமானது தேக்கு, மஹோகனி, வெண்சந்தனம், ரம்புட்டான் போன்ற தாவரங்கள் பலவற்றை இலங்கையில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் பயிரிட்டு இந்நாட்டுக்கு தேவையான அந்நியசெலாவணியை பெற்றுக்கொள்ள பெரும் பங்களிப்பை வழங்கி வருகின்றது. 2013ஆம் ஆண்டில், அகர்வுட் செடிகளை நடும் பணிகளை செய்யத் தொடங்கி, தற்போது 8 இலட்சத்துக்கும் அதிகமான செடிகளை ‘சதாஹரித’ பெருந்தோட்ட நிறுவனம் கொண்டுள்ளது.