எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணாவின் இல்லத்தில், இது பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதுபற்றி ஊடகங்களுக்குக் கருத்துரைத்த அவர்:
எதிர்வரும் தேர்தல்களில் இணைந்து போட்டியிட இணக்கம் ஏற்பட்டுள்ளது.சின்னம் தொடர்பில் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை. இரு கட்சிகளும் இணைந்து செயற்படுவதா? இல்லையா? என்பது தொடர்பிலும் உறுதியான நிலைப்பாடு எட்டப்படவில்லை.
விரைவில் இதற்கான இணக்கமும் ஏற்படும்.எதிர்காலத்தில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றின் தலைவர்கள் சந்தித்துக் கலந்துரையாடல் நடத்துவர்.
எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் ஏற்கனவே பல சுற்று, கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.