குப்பைகள்
கூடிக்கொண்டிருப்பதால்
அசுத்தமாகியது மனசு
அவள் ஆவியைத்தவிர
எந்த
வெள்ளாவியில்
வெளுக்க நான்..?
அது மழைக்க காத்திருக்கும்
பின்னந்தி
மரங்கள் இலைக் கைகளால்
காற்றை கசக்கி எறிகின்றன
கடல் ஊருக்குள்
இறங்கி வாசலில்
வழிகேட்டு கடக்கிறது
பொதுவான மொழியானதால்
எல்லா உயிர்களுக்கும்
விளங்குகிறது
அது ஒரு போதையும் கூட
எந்த காலத்திலும்
பசி அடங்குவதில்லை.
கிளைகளிலிருந்து
வெள்ளைக்கோட்டு
அணில்கள் கீழிறங்கி
மஞ்சள் கோடுகளை
அழித்துக்கொண்டிருந்தன
வழியெங்கும் நீர்
வண்ணமாய் இறைந்து
கிடக்கின்றன
அவள் வீசிய
புன்னகைப் பூக்கள்
நாசிக்குள் நறுமணத்தின்
நர்த்தனம்_
ஒரு வார்த்தைக்காக சாலை
வெள்ளத்தில் மூழ்கி
வெறிச்சோடி
கிடப்பதாய் உணர்கிறேன்
உணர்வுதானே காதலும்
நான் வழிப்போக்கன்
மறக்கடிக்கச் செய்கின்றன
அவள் பிடிவாதத்தின்
பெரும் பங்கு
இருளில் நின்று
திரும்பிப் பார்த்தேன்
அது பகலாயிருந்தது
அவள் வந்துபோன இடம்
எந்த ஊராயிருக்கும்
என்பதுதான்
சொல்லப்படாத ரகசியமாய்
இருந்தது கனவில்!