மனதைத் திருடியவள்
மனதில் பதிந்தாள்
காதல் கிறுக்கன்
ஆனேன் நானும்
நாட்களின் வேகத்தில்
சமரசமும் கிடைத்தது
வாழ்க்கையின் அர்த்தம்
ஒவ்வொன்றாய் புரிந்தது
பழமைகளைக் கடந்து
புதுமையானது வாழ்வு
புதுப்பூவாய் பூத்தவள்
புதுவரவாய் வந்தாள்
இல்லமதையே மகிழ்வாக்கி
இல்லறத்தில் இணைந்தாள்
நினைவுகளுக்குள் புகுந்து
நிம்மதியைத் தந்து விட்டாள்..
அன்பினில் கலந்தே
ஆறுதல் பரிசளித்தாள்..
கவலைகளை விரட்டிடவே
கைகொடுத்து உதவினாள்….
இன்னல்கள் தொலைத்து
இன்புற்றது வாழ்வே
இதயம் கவர்ந்தவளே
பிரியாத வரமானாள்
வாழ்வும் சிறப்பாய்
அமைந்து காலங்களும்
உருண்டோடியது மட்டும்
அல்லாது
சோகங்கள் கொண்டதாய்
வாழ்வுதன்னை பிரித்தது
சந்தேகம் என்ற மிகக்
கொடிய நோய்
இருவரும் பிரிந்து
அவர்களுக்குள் விரிசல்
தொடர்ந்தது…
அதனால் அவர்களின்
வாழ்க்கையில்
புதிராகிப் போனது புன்னகை.