வீழ்ந்து விடக் கூடாது என்று
எண்ணும் போதெல்லாம்
துரோகத்தால்
வீழ்த்தப்பட்டு கொண்டே இருக்கிறேன்.
அன்பினால் ஈர்க்கப்பட்ட
வார்த்தைகளைக் கொண்டு
இரக்கம் இல்லாமல் பேசி விடுவார்கள்
உறக்கத்தில் கூட நாம்
மகிழ்ந்து விடக்கூடாது என்று.
துடித்துக் கொண்டிருக்கும் இதயத்தை
நிறுத்திட வேண்டுமென
பழகிப் பார்க்கின்றனர்
போலியான உறவினை பயன்படுத்தி
எப்படியாவது நிறுத்தி விட வேண்டுமென்று.
துன்பங்களை பகிர்ந்திட
உறவு இருக்கிறது என்று
நாம் எண்ணி
உளறி தீர்க்கும் போது தான் தெரிகிறது
இந்த துன்பத்துக்கான காரணம்
அவர் தான் என்று.
ஆசை உலகமென்பதால் தான்
மற்றவர்களை
வீழ்த்தி பார்க்க வேண்டும் என்று
அலைந்து திரிகிறார்கள்.
அடிக்கடி பேச வார்த்தைகள் வருவதில்லை
அவசரப்பட்டு பேசிவிட்டால்
முட்டாள் என பெயர் சூட்டி போகிறது
இந்த உலகம்.
அடிக்கடி சிரித்துக் கொள்ளுங்கள்
மற்றவர்கள் நம்மை
பைத்தியம் என்று கூறினாலும்
அதனை பொருட்படுத்தாது,
அவர்களுக்கு தெரியாது நாம்
துன்பத்தினை மறைப்பதற்காக
சிரித்துக் கொண்டிருக்கிறோம் என்பது
ஏதோ பிறந்து விட்டோம்
வாழ்ந்து விடுவோம் என்று
வாழ்ந்து விடாதீர்கள்!
வாழும்போதே வாழ வைத்து
வாழ்ந்து போவோம்
நம் துன்பங்களை மறைத்து.
எல்லாம் முடிந்ததும்
ஓடி வருவார்கள்
கடைசியில் நானும்
உன்னோடு சேர்ந்து தான்
பயணித்துக் கொண்டிருக்கிறேன் என்று
அன்றாவது புரிந்து கொள்ளுங்கள்
யார் நமக்காக இருக்கிறார்கள்