இயற்கை எழில் கொஞ்சும்
இலங்கை நாடு எம் நாடு
செயற்கை வர்ணம் வேண்டாத
செழிப்பு நிறைந்த எம் நாடு
மன்னர் ஆட்சியிலும் அன்று
மங்காப் புகழ்பெற்ற நாடு
சின்ன நாடு என்றாலும்
சிறப்பு செழிப்பு பெற்ற நாடு
இன ஒற்றுமை மேலோங்க
இலங்கை பெற்ற சுதந்திரம்
மன வலிமை தந்ததுவே
மாற்றமாக மிளிரவே
எழுபத்தேழாவது சுதந்திரம்
எட்டிப் பார்க்கும் வேளையிது
பொழுதுகளெல்லாம் சிறப்பாக
பொருளாதாரத்தோட மேலோங்க
ஆங்கிலேயர் ஆட்சியிலே
அகிம்சையில் சதந்திரம் பெற்ற
பங்குதாரர்களாக பெரியார்கள் பலர்
பசுமையான நினைவுகளோடு
எல்லோரும் ஒரே தாய் மக்கள்
என்றிணைவோம் என்றுமே
நல்லவரென்றே எல்லோரையும்
நல்லெண்ணத்தில் பார்த்திடுவோம்
வளர்ச்சி பாதையில் பயணிக்க
வியர்வை சிந்தி உழைத்திட்டு
கிளர்ச்சி எட்டிப் பார்த்திடாது
கோமான்களை உருவாக்குவோம்
பசுமையான எம் நாடு
பலரது உள்ளங்களிலும்
பேசும் பொருளாகவே மிளிர
பொறுப்பாளராக நாமிருப்போம்