பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புள்ளதால், வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள 167 பேருக்கு சர்வதேச பொலிஸார் பிடியாணை பிறப்பித்துள்ளனர். இவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளனர். இதன் பொருட்டு, இவர்களுக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறானவர்கள் தற்போது, டுபாய், இந்தியா, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில், வசித்து வருவதாகவும் சர்வதேச பொலிஸார் கூறியுள்ளனர். இந்நிலையிலே , இவர்களுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் சட்டத்தின் கீழ், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதனால், இவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
வெளிவிவகார அமைச்சின் உதவியுடன் இவர்கள் கைது செய்யப்படவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை சர்வதேச பொலிஸார் மேற்கொண்டுள்ளதாக, இலங்கை பொலிஸ் தலைமையகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.