சுதந்திர தினத்தின் பிரதான நிகழ்வுகள் எதிர்வரும் (04) கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ளன.
ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வுகளை பார்வையிடுவதற்கு பொதுமக்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தேசத்தின் அபிமானத்தை பாதுகாக்கும் வகையில் வழக்கம்போன்று எவ்வித குறைப்பாடுகளுமின்றி, கம்பீரமாகவும், எளிமையான முறையிலும் சுதந்திர தின நிகழ்வை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொது நிருவாக, மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி ஏ.எச்.எம்.எச் அபயரத்ன தெரிவித்தார்.இம்முறை பொதுமக்களுக்கும் இந்நிகழ்வுகளைப் பார்வையிட அனுமதி வழங்கப்படவுள்ளதாகவும் பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் டொக்டர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன மேலும் தெரிவித்தார். இதற்கு முன்னர், யாருக்காக இந்த சுதந்திர தின விழா நடத்தப்பட்டது என்ற கேள்வி எழுந்தது.இம்முறை, அதிக மக்கள் பங்களிப்புடன், மக்கள் சுதந்திர தின விழாவாக நாட்டின் 77 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட அரசு முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார். புது யுகத்ததை நோக்கிய பயணத்தில் நாட்டின் பொருளாதார நிலைமைகளை கருத்திற் கொண்டு அத்தியாவசிய விடயங்களுக்கு மாத்திரம் முக்கியத்துவம் வழங்கப்பட்டு மிகவும் எளிமையான முறையில்,இவ்விழா நடத்தப்படுகிறது.
ஸாதிக் ஷிஹான்