54
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கடந்த வெள்ளிக்கிழமை (31) மாவிட்டபுரத்தில் உள்ள மாவை சேனாதிராஜாவின் வீட்டுக்குச்சென்று அஞ்சலி செலுத்தினார். இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா கடந்த புதன்கிழமை (29) காலமானார். அவரது பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக மாவிட்டபுரத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலே, மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு நேரில் சென்று ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார். மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரியைகள் இன்று (02) ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளன.