முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வின் மகனான யோஷித ராஜபக்ஷ தம்மிடமிருந்த இரண்டு துப்பாக்கிகளையும் பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைத்துள்ளதாக தகவலறிந்த தரப்புக்கள் தெரிவித்துள்ளன. இதற்கு முன்னர், பாதுகாப்பு அமைச்சு இவருக்கு அறிவித்ததற்கிணங்கவே, இத்துப்பாக்கிகளை அவர் கையளித்துள்ளார். ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன் பிரகாரம் ஏழு துப்பாக்கிகளை யோஷித்த ஒப்படைத்திருந்தார். மீதியையும் வழங்குமாறு வழங்கப்பட்ட உத்தரவுக்கிணங்கவே,இவற்றையும் ஒப்படைத்துள்ளார்.
மஹிந்த ராஜபக்க்ஷவின் ஆட்சிக்காலத்தில் யோஷித்த ராஜபக்க்ஷ ,கடற்படை அதிகாரியாக செயற்பட்டார். இதன்போதே அவருக்கு இந்தத் துப்பாக்கிகள் வழங்கப்பட்டிருந்தன. எனினும்,கடற்படையிலிருந்து விலகியபோதும் இத்துப்பாக்கிகளை அவர் ஒப்படைக்காதிருந்தார். இவ்வாறுள்ள நிலையில், காணி மோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் அண்மையில் கைது செய்யப்பட்ட இவர், பிணையில் விடுதலையானமையும் குறிப்பிடத்தக்கது.