ஜனவரி 30 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட ஆரம்பநிகழ்வைத் தொடர்ந்து, கராப்பிட்டிய ட்ரெயில் புற்றுநோய் வைத்தியசாலைத் திட்டத்தின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பிக்கவுள்ளதாக, சுகாதார அமைச்சு மற்றும் இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடன், Colors of Courage நிதியம் அறிவித்துள்ளது.
கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் தற்போதுள்ள புற்றுநோய்ப் பிரிவின் துணைப் பிரிவாக அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த புதிய 10 மாடி கட்டட புற்று நோய் சிகிச்சை வசதி நிலையத்தின் நிர்மாணப்பணிகள் முழுமையாக நிறைவடைந்தவுடன், இதில் அமைக்கப்படும் அதிநவீன கதிரியக்கப் பிரிவு, எலும்பு மச்சை மாற்று சிகிச்சை பிரிவு, குழந்தை மருத்துவப் பிரிவு, அவசர சத்திர சிகிச்சைப்பிரிவு [Surgical ICU], வேதியல் [கீமோதெரபி] பிரிவு, சத்திர சிகிச்சை கூடங்கள் மற்றும் 160 படுக்கைகள் கொண்ட புற்றுநோயியல் வார்டுகள் ஆகிய பிரிவுகள் மூலம் இங்கு அவசர சிகிச்சை பெறுவதற்காக சுற்றியுள்ள மாகாணங்களில் இருந்து வரும் நோயாளிகளின் வருகை அதிகரித்து வரும் நிலையில் அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை வழங்கவுள்ளது.
Colors of Courage நிதியமானது (COC) – மஹரகம தேசிய புற்றுநோய் நிறுவனத்தில் சிகிச்சை வசதிகளை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும் –