Women in Management (WIM) அமைப்புடன் இணைந்து Hemas Consumer Brands நிறுவனத்தின் முதன்மையான சலவை பராமரிப்பு வர்த்தகநாமமான தீவாவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘தீவா கரத்திற்கு வலிமை’ தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டுத் திட்டமானது, இன்றைய பொருளாதார சூழலில் தொழில் முனைவோர் எதிர்கொள்ளும் சவால்களுக்கு அவசியமான அறிவு, திறன் மற்றும் நம்பிக்கையுடன் பெண்களை தொடர்ச்சியாக வலுவூட்டி வருகிறது. மத்திய மாகாணத்தின் மாத்தளையில் நடைபெற்ற தீவா கரத்திற்கு வலிமை தொழில்முனைவோர் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் வெற்றியாளர்களைக் கொண்டாடும் பிரத்தியேக நிகழ்வை தீவா அண்மையில் நடாத்தியிருந்தது. ‘தீவா கரத்திற்கு வலிமை’ தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டுத் திட்டமானது, தீவா வர்த்தகநாமம் கொண்டுள்ள நோக்கத்தின் ஒரு அம்சமாகும். இது பெண் தொழில்முனைவோருக்கு நிபுணத்துவ வழிகாட்டல், வணிக ரீதியிலான புத்திசாலித்தனம், திறன்கள், திறமைகளை ஏற்படுத்தும் முதன்மை நோக்கத்துடன் திட்டமிடப்பட்டுள்ளது.
பெண் தொழில்முனைவோருக்குத் தேவையான அறிவு, திறன், நம்பிக்கையை வழங்குவதன் மூலம் அவர்களின் வணிக செயற்பாடுகளை நிர்வகித்தல் மற்றும் மூலோபாய ரீதியாக அதனை வழிநடத்திச் செல்லல் ஆகியவற்றிற்கு ஊக்கமளிக்கும் வகையில் இந்த திட்டம் சிறப்பாக திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. போதிய நேரமின்மை, உரிய அறிவு இல்லாமை, தங்களது அபிலாஷைகளைத் தொடர ஆதரவின்மை போன்ற காரணங்களால் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் புரிந்து, தீவா இந்தத் திட்டத்தை ஆரம்பித்திருந்தது. இலங்கை முழுவதிலும் உள்ள திறமையான பெண் தொழில்முனைவோருக்கு கைகொடுக்கும் தீவாவின் அர்ப்பணிப்பை இந்த திட்டம் கோடிட்டுக் காட்டுகிறது.