வறுமை பகுப்பாய்வு மையம் (CEPA) தனது நிறைவேற்று பணிப்பாளராக டொக்டர் சிரிமால் அபேரத்னவை நியமித்துள்ளது. ஒரு சிறந்த பொருளாதார நிபுணரும் சிந்தனைத் தலைவருமான அவர், இலங்கைக்கு முக்கியமான இந்த நேரத்தில், கல்வி, கொள்கை உருவாக்கம் மற்றும் ஆராய்ச்சி துறைகளில் தனது பரந்த அனுபவத்தையும் நிபுணத்துவத்தையும் CEPA- க்கு கொண்டு வருகிறார். அவரது வருகை, CEPA-இன் பணிகளுக்கு புதிய உந்துதலை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் ஓய்வு பெற்ற பேராசிரியரான டொக்டர் அபேரத்ன, Amsterdam சுதந்திர பல்கலைக்கழகத்தில் PhD பட்டமும் பெற்றுள்ளார். மேலும், தி ஹேக்கில் உள்ள சமூக ஆய்வு நிறுவனம் (Institute of Social Studies) மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் இருந்து மேம்பட்ட பட்டங்களையும், முதுகலை பட்டத்தையும் (BA Honors) பெற்றுள்ளார். சர்வதேச வர்த்தகம், கொள்கை சீர்திருத்தங்கள் மற்றும் கிராமப்புற மேம்பாடு ஆகிய துறைகளில் அவரது பங்களிப்புகள் விரிவான ஆராய்ச்சி, வெளியீடுகள் மற்றும் ஊடக விளக்கங்கள் மூலம் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
அவர் 2022 முதல் இலங்கை மத்திய வங்கியின் பங்குதாரர் ஈடுபாடு குழுவின் (Stakeholder Engagement Committee – SEC) தலைவராகவும், 2017 முதல் 2021 வரை பணக் கொள்கை ஆலோசனைக் குழுவின் (Monetary Policy Consultative Committee – MPCC) தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.