இலங்கையின் வடபிராந்தியத்தில் முயற்சியாண்மையை ஊக்குவித்து பொருளாதார மேம்பாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் டேவிட் பீரிஸ் குழுமத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டமே ‘தளிர்’ ஆகும். புதுமை நிறைந்த, விரிவுபடுத்தக் கூடிய மற்றும் நிலைத்திருக்கக் கூடிய வணிக முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம், வாகனத்துறை (Automotive), சரக்குப் போக்குவரத்து (Logistics), தகவல் தொழில்நுட்பம் (IT), சுற்றுலா (Tourism), விவசாயம் (Agriculture), மற்றும் ஏற்றுமதி (Exports), ஆகிய துறைகளில் கணிசமான முன்னேற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வாகனத் தயாரிப்பு மற்றும் சேவைகள்(Automotive products and Services), நிதிச் சேவைகள் (Financial services), சரக்குப்போக்குவரத்து (Logistics), களஞ்சியப்படுத்தல் செயற்பாடுகள் warehouse operations, பந்தயம், (Racing), பொழுதுபோக்கு (Leisure), தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொடர்பாடல் (Information and Communication technologies) ரியல் எஸ்டேட்(Real Estate), ஷிப்பிங் (Shipping), கரையோர சேவைகள் (Marine services) மற்றும் சூரிய சக்தி (Solar Energy) போன்ற துறைகளில் கடந்த மூன்று தசாப்தத்திற்கு மேல் 35 கம்பனிகளைக் கொண்டு இயங்கும் டேவிட் பீரிஸ் குழுமம் இந்த ‘தளிர்’ திட்டத்தை அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தியுள்ளது.
முயற்சியாண்மைகளின் செழிப்பு மற்றும் பிராந்தியத்தின் நீண்டகால வளர்ச்சி என்பன இத்திட்டத்தின் பிரதான நோக்கங்களாக அமைந்துள்ளன. தளிர் என்ற வார்த்தைக்கு உண்மையான அர்த்தத்தை வழங்கும் வகையில் புதிய முயற்சியாண்மைகளை வளரச் செய்வதில் டேவிட் பீரிஸ் குழுமத்தின் அர்ப்பணிப்பு இத்திட்டத்தின் ஊடாக அடிக்கோடிட்டுக் காட்டப்படுகின்றது.