பஜாஜ் நிறுவனத்தின் எலக்ரோனிக் உற்பத்திப் பொருட்களை வட மாகாணத்தில் விநியோகிக்கும் விநியோகஸ்தர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு Mans Lanka (Pvt)Ltd நிறுவனத்தின் ஏற்பாட்டில் அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் தனியார் விருந்தகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இந்திய பஜாஜ் நிறுவன இலங்கை பிரதிநிதி ஹார்த்திக் ஷா, மேன்ஸ் லங்கா நிறுவனத்தின் பொது முகாமையாளர் ரஞ்சன் லியனகே, வர்த்தக முகாமையாளர் பைரூஸ் ஹபீல் மற்றும் வியாபார அபிவிருத்தி முகாமையாளர் (Business Development Manager) இப்ராஸ் இம்தியாஸ் ஆகியோரினால் விநியோகஸ்தர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.