இரண்டு தசாப்தங்களாக நுகர்வோரின் நன்மதிப்பை வென்ற Fadna தமது நோக்குக்கமைய நுகர்வோர்களை மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதை உறுதிப்படுத்தும் சமூகமொன்றை உருவாக்குவதற்கு அடித்தளமிடும் வகையில் கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைந்து அறிமுகப்படுத்தியுள்ள ஒர்த்தோ ஷில்ட், வர்னொலக் மற்றும் சேட்டினி ஆகிய முத்தயாரிப்புகளும் களனி பல்கலைக்கழக பேராசிரியர் ரவி திசாநாயக்க உள்ளிட்ட குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் 90% மேலான நுகர்வோர் நம்பிக்கையினை வென்றுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
மேற்படி மூன்று உற்பத்திகளும் இயற்கை பொருட்களை கொண்டு உற்பத்தி செய்யப்பட்டுள்ளதோடு கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைந்து 2022 ஆம் ஆண்டில் அவை சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டன. அந்த உற்பத்திகளில் முறையே மூட்டு வலிக்கு இயற்கைத் தீர்வாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒர்த்தோ ஷில்ட் 90.3% புற்றுநோய் செல்களை அழிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட வர்னொலக் 94% மற்றும் முடி உதிர்வை தடுத்து முடி வளர்ச்சிக்கு உறுதுணையாக அறிமுகப்படுத்தப்பட்ட சேட்டினி 90% நுகர்வோர் நம்பிக்கையினையும் வென்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் போது இலங்கையின் பாரம்பரிய மற்றும் ஆயுர்வேத அறிவை பயன்படுத்தி உள்நாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட அறிவியல் ஆராய்ச்சிகள் ஊடாக உற்பத்தி செய்யப்பட்டுள்ள மேற்படி உற்பத்திகள் பாவனைக்கு இலகுவான முறையில் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
Fadna உள்நாட்டு பல்கலைக்கழங்களின் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற வெற்றிகரமான ஆராய்ச்சிகளின் பெறுபேறுகளை சமூகத்துக்கு கொண்டு சென்று நுகர்வோருக்கு வினைத்திறன்மிக்கதும் தரமானதுமான உற்பத்திகளை சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.