30
நிழல்கள் அப்படித்தான்
நீண்ட பிரமாண்டத்தில்
நிஜத்தின் பெரிதாய்
நின் முன் தோன்றும்
நிலைபேறு ஆராய்ந்து
நிஜத்தை நீ கண்டுபிடி
நிழலின் மாயம்
நிலைக்கா சாயம்
நன்றாய் நடிக்கும்
நாகமாய்ப் படமெடுக்கும்
நின்று நிதானமாக
நிகழ்வை அவதானி
நிழலின் அவலம்
நேர்மறை எதிலும்
நியாயமே யாவிலும்
நிறைவாய் நினைப்பாய்
நெறிமுறை வகுப்பாய்