26
அந்தி மழை
கழுவி விடுகிறது
இலைகளின் அழுக்கை.
நாளை விடுமுறை
மும்முரமாய் இயங்கும்
மதுபான சாலை.
காக்கையின் கூடு
நிம்மதியாய் உறங்கும்
குயில் குஞ்சு.
தேர்தல் சுவரொட்டி
பார்த்துச் சிரிக்கும்
தெருப் பைத்தியம்.
சிறகடிக்கும் பறவை
அசைத்து விடுகிறது
கொஞ்சம் இலைகளை.
முற்றத்து மாமரம்
இல்லாமல் போனது
காக்கையின் வசிப்பிடம்.
தெரு விளக்குகள்
பிரகாசமாய் தெரிகின்றன
வெள்ளைக் கோடுகள்.
மலர்களின் வண்ணம்
ரசிக்க வைக்கிறது
நட்டிய ஒழுங்கு.
ஓடும் நீர்
கூடவே செல்லும்
கொஞ்சம் சருகு.