17
தவறு என்பது
தண்டிக்க வல்லது
செய்யாத தவறாயின்
தயங்காது முன்செல்லு
நேர்மையே உன்வழி
நீதிக்கு முகங்கொடு
தாழ்வாக இருந்தாலும்
தயவாக நீபேசு
எந்நாளும் உனதென
எண்ணியே மகிழ்ந்திடு
ஏற்றமும் தாழ்வும்
இறையவன்
கொடுத்திடும்
அடுத்தவர் பேசிடும்
அருவருப்பை வெறுத்திடு
உதயமே நீயானால்
உலகையே ஆண்டிடு
நீதியின் நிழலிலே
நித்தமும் நடந்திடு
நடந்ததைக் கடந்திடு
கவலையை மறந்திடு