21
தொலைத்த இடத்தில் தான்
தேட வேண்டும் என்றார்கள்
என் கனவுகளை
முழுமையாக – உன்
ஈர விழிகளில் இழந்தேன்
என் சந்தோஷங்கள்
அனைத்தையும் – உன்
புன்னகையில் இழந்தேன்
என் மொந்த
நினைவுகளையும் – உன்
சில வார்த்தைகளில் இழந்தேன்
என் பிஞ்சு இதயத்தை
உன்னிலே மொத்தமாக
நான் இழந்தேன்.
நீயே இல்லாமல்
உன்னில் தொலைத்தவற்றை
எப்படி தேடுவேன் நான்