சமூக வலைதளங்களில் “K” என்ற சொல் அதிக அளவில் தற்போது பயன்படுத்தப்படுகிறது.
ஆயிரம் ரூபாய் என்பதையோ அல்லது ஆயிரம் என்ற எண்ணையோ குறிப்பிடும்போது K என்ற வார்த்தையை பயன்படுத்துவதை பார்த்திருப்போம்.
உதாரணத்திற்கு 1,000 என சொல்வதற்கு 1K என்றும் 10,000 என்றால் 10K என்றும் குறிப்பிடுவோம்.
மில்லியன் என்ற எண்ணிற்கு ‘M’ என்ற எழுத்தும் பில்லியனுக்கு ‘B’ என்ற குறியீடும் பயன்படுத்தப்படுகிறது.
ஆனால், ‘1000’ என்ற எண்ணிற்கு மட்டும் ஏன் ‘K’ பயன்படுத்தப்படுகிறது.
மேற்கத்திய நாடுகள் பலவும் கிரேக்கம் மற்றும் ரோமன் கலா சாரத்தின் தாக்கத்தையே அதிகம் கொண்டுள்ளன. அந்நாட்டிலேயே, இந்த ‘K’ என்ற எழுத்தும் பயன்பாட்டுக்கு வந்தது. கிரேக்க மொழியில் ‘chilioi’ என்றால் ஆயிரம் என்று பொருள். கிரேக்க வார்த்தையான Chilioi என்பது பிரெஞ்சுக்காரர்களால் கிலோ என்று சுருக்கப்பட்டது. அதற்கு பிறகுதான் கிலோ மீற்றர், கிலோ கிராம் போன்றவை கணிக்கப்பட்டது.
அந்த ‘Kilo’ என்பதற்காக தான் ‘K’ என்ற குறியீடு கொடுக்கப்படுகிறது.
மேலும் மில்லியன் என்ற எண்ணிற்கு ‘M’ என்ற எழுத்தும், பில்லியன்-க்கு ‘B’ என்பதை போல, ட்ரில்லியன் என்பதற்கு ‘T’ என குறிப்பிடப்படும். எனவே, ஆயிரம் என்பதற்கு ‘T’ என்ற எழுத்து பயன்படுத்துவதில்லை.