மில்லியனயர்களை உருவாக்கியமைக்காக புகழ்பெற்றுள்ள SLT-MOBITEL இன் ‘Cash Bonanza’ தற்போது மேலும் பல வெகுமதிகளை வழங்க முன்வந்துள்ளது. ரூ. 12 மில்லியன் பரிசுத் தொகையிலிருந்து, புதிய மற்றும் ஏற்கனவே காணப்படும் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு பணப் பரிசுகளை வெல்வதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது.
ரூ. 100 எனும் சிறிய தொகையை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, ரீலோட்டை பயன்படுத்தி பிளான் ஒன்றை செயற்படுத்திக் கொள்ளல் அல்லது SLT-MOBITEL மொபைல் இணைப்பை பயன்படுத்தி கட்டணப் பட்டியல் கொடுப்பனவை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு இந்த வெற்றியாளர் தெரிவில் உள்வாங்கப்படுவதற்கான தகைமை வழங்கப்படுவதுடன், கவர்ச்சியான வெகுமதிகளை வெல்வதற்கான வாய்ப்பையும் வழங்கும். 2025 ஜனவரி 1ஆம் திகதி முதல் 2025 ஜுன் 30 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் Cash Bonanza இனால், வெற்றியீட்டுவதற்கு பல்வேறு வாய்ப்புகள் வழங்கப்படும். இதில், மாபெரும் இறுதிப்பரிசு வெற்றியீட்டும் வாய்ப்பு வழங்கப்படுவதுடன், அதிர்ஷ்டசாலி வெற்றியாளருக்கு ரூ. 3 மில்லியன் பெறுமதியான பணப் பரிசை ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு தடவையும், ரூ. 1 மில்லியன் பரிசுத் தொகை மாதாந்தம் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பும் வழங்கப்படும்.
நாடு முழுவதிலும் விறுவிறுப்பான நிகழ்வுகள் மற்றும் செயற்பாடுகளுடன் முன்னெடுக்கப்படும் ‘Cash Bonanza 2025’ வெறும் வெகுமதிகள் என்பதற்கு அப்பால் செல்வதாக அமைந்திருக்கும். இந்தத் திட்டம் மக்களுக்கு தொடர்புகளை பேணல், விநோத அம்சங்களில் ஈடுபடல் மற்றும் வெற்றியீட்டுவதற்கான வாய்ப்பை வழங்கும்.