இலங்கையின் ஆடைகள் உற்பத்தித் துறையில் முன்னோடியான நாமமாகவும், தனது சகல செயன்முறைகளிலும் காபன் நடுநிலை சான்றிதழைப் பெற்றுள்ள ஒரே குழும நிறுவனமுமாக திகழும் Star Garments Group (“Star”), 32 ஆவது NCE ஏற்றுமதி விருதுகள் வைபவத்தில் ஆடைகள் மற்றும் ஆடை உற்பத்தி பிரிவில் மிகப் பெரிய பிரிவில் தங்க விருதை சுவீகரித்தது.
இலங்கை தேசிய ஏற்றுமதியான சம்மேளனத்தினால் (NCE) வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் இந்த நிகழ்வு, இம்முறை ‘embrace innovation and digitalization’ எனும் தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்பட்டது. கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலில் இந்நிகழ்வு நடைபெற்றது.
2023 ஆம் ஆண்டில் சர்வதேச சந்தையில் நிலவிய ஏற்றத்தாழ்வுகள் காரணமாக எழுந்திருந்த பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இந்த கௌரவிப்பு Star க்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. சவால்கள் நிறைந்த தொழிற்பாட்டு சூழலிலும், புதிய கையகப்படுத்தல்கள் மற்றும் குழுமத்தின் பன்னிரண்டாவது தொழிற்சாலையாக Kolonna Manufacturing (Pvt) Limited ஐ உள்வாங்கியிருந்தமை போன்றன அடங்கலாக, இலங்கையில் Star தனது பிரசன்னத்தை தொடர்ச்சியாக மேம்படுத்தியிருந்தது.
சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற வர்த்தக நாமங்களுக்கு ஆடை ஏற்றுமதிகளை Star மேற்கொள்வதுடன், ஒழுக்கமான, உயர் தரம் வாய்ந்த ஆடை உற்பத்திக்கான முதல்தர தெரிவாக இலங்கையை ஊக்குவித்த வண்ணமுள்ளது.