10
காங்கேசன் கொழும்பு வழி
ஐந்து வண்டி தினமோடும்!
ஐந்து மணிப் பயணம் தான்!
ஐயப் படாதீர் என்றார்..!
தண்டவாளத் தொடர்பணியில்
வண்டவாள மோசடியோ?
ஊழல் திமிங்கிலங்கள்
சுருட்டிக் கொண்டனவோ?
கண் முன்னே கரட் தொங்க
கழுதை வண்டி இழுத்தல் போல்
ஆணைச் சீட்டுப் பயணம்
அனுரதபுரத்தின் அப்பால்
‘ஆறு மாத வேலை’ என்றார்
பல்லைக் கடித்திருந்தும்
பாதை வேலை தீரவில்லை!
—–
திருத்துவதில் மோசடியோ?
எந்திரம் விட மறுப்போ?
நிறுத்திய வண்டிகளில்
பொறுக்கிகள் திருடினரோ?
பத்திரிகை வழியே தான்
பல கதைகள் வருகிறதே!
உயிரச்சம் இன்றி வர
ரயிலேசேவை வேண்டுமையா!