91
இளைஞர் ஒருவரின் கொலை தொடர்பாக, இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் சாரதி கடந்த (02) வியாழக்கிமை கைது செய்யப்பட்டார். வெளிநாடு செல்லவிருந்த நிலையில் பொலிஸார் இவரைக் கைது செய்தனர். கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த இத்துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில், இச்சந்தேக நபர் கடந்த வியாழக்கிழமையே கைதானமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இவரை எதிர்வரும் (17) வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும், இச்சம்வம் தொடர்பில் இராஜாங்க அமைச்சரின் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் ஏற்கனவே கைதாகி ஒரு வருடத்தின் பின்னர், பிணையில் வெளிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.