உலகில் அதிகமாகப் பனி பொழியும் நாடு ஜப்பான். ஜப்பானில் குளிர்காலத்தில் அதிகளவு பனி இருக்குமாம்.
ஆனால், உலகில் அதிகமாகப் பனி பொழியும் நாடு ஐஸ்லாந்து என்று தான் பலர் நினைவில் கொண்டுள்ளனர். அத்தோடு பிரிட்டன், ரஷ்யா, கனடா உள்ளிட்ட நாடுகளாகும். ஆனால் பூமியின் வட துருவத்தை ஒட்டிய இந்த நாடுகளை விடவும் அதிகளவு பனி ஜப்பானில் பொழிகிறதாம்.
வெறும் ஒரு இலட்சம் மக்களே வசிக்கும் சிறிய ஜப்பான் நகரங்களான அமோரி, சப்போரோ, டொயாமா ஆகிய நகரங்களில் 7.92 மீ. பனிப்பொழிவு காணப்படும். 1927 ஆம் ஆண்டு ஜப்பானின் இபூகி மலையில் 1182 சென்டி மீற்றர் அளவு பனிப்படலம் இருந்தது. உலகில் அதிக அடர்த்தி கொண்ட பனிப்படலம் இதுவே. கடந்த நூறு ஆண்டுகளாகப் பனிப்பொழிவு காரணமாக உருவாகும் பனிப்படலங்களுள் இபூகி பனிப்படலமே முதன்மை வகிப்பது குறிப்பிடத்தக்கது.
ஜப்பானின் 51 சதவீத நிலப்பகுதியில் பனிப்படலம் ஏற்படுவதால் பனிக்காலத்தில் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்படுகிறது. பனி படர்ந்த சாலைகள், ரயில்வே தண்டவாளங்கள் உள்ளிட்ட பொது இடங்களை அவ்வப்போது பொதுப் பணியாளர்கள் சுத்தம் செய்வது வழக்கமாம்.
பனிச்சரிவு அபாயம் அடிக்கடி ஜப்பான் அரசால் விடுக்கப்படும். பனி அபாயம் கொண்ட பகுதிகளுக்கென ஜப்பான் அரசு பொதுமக்கள் பாதுகாப்பு கருதி சில சிறப்புச் சட்டங்களை வகுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.