அமெரிக்கா
உலகில் அதிக விமான நிலையங்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் 15,873 விமான நிலையங்களுடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
பிரேசில்
4,919 விமான நிலையங்களுடன், பிரேசில் நாடு இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதில் 23 சர்வதசே விமான நிலையங்களும் அடங்கும்.
அவுஸ்திரேலியா
2000-க்கும் அதிகமான விமான நிலையங்களை கொண்ட நாடுகளில் அவுஸ்திரேலியா 3 ஆம் இடத்தில் உள்ளது. 2180 விமான நிலையங்களுடன், அதிக எண்ணிக்கையிலான சிறிய பிராந்திய விமான நிலையங்களையும் இது கொண்டுள்ளது.
மெக்சிகோ
மெக்சிகோவில் 1,485 விமான நிலையங்கள் உள்ளன. அவற்றில் பல சுற்றுலாவை எளிதாக்குகின்றன. ஏனெனில் இந் நாடு ஒரு பிரபலமான சுற்றுலா இடமாக உள்ளது.
கனடா
கனடா இந்த பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. இங்கு விரிவான விமான நிலையங்கள் 1,425, அதன் பரந்த நிலப்பரப்பையும் ஒப்பீட்டளவில் குறைந்த மக்கள் தொகை அடர்த்தியையும் பிரதிபலிக்கிறது.
லண்டன்
லண்டனில் மொத்தம் 1,043 விமான நிலையங்கள் உள்ளன. இது இந்த பட்டியலில் 6-வது இடமாகும். ஹீத்ரோ, கேட்விக் மற்றும் மென்செஸ்டர் போன்றவை லண்டனின் முக்கிய சர்வதேச விமான நிலையங்கள் ஆகும்.
ரஷ்யா
ரஷ்யா, 904 விமான நிலையங்களுடன், ஒரு பெரிய புவியியல் பகுதியைக் கொண்டுள்ளது.
ஜெர்மனி
திறமையான உட்கட்டமைப்புக்கு பெயர் பெற்ற ஜெர்மனியில் 838 விமான நிலையங்கள் உள்ளன. இது ஐரோப்பாவில் விமானப் பயணத்திற்கான முக்கிய மையமாக உள்ளது.
ஆர்ஜென்டினா
9-வது இடத்தில் ஆர்ஜென்டினா உள்ளது. இங்கு 756 விமான நிலையங்கள் உள்ளது.
பிரான்ஸ்
689 விமான நிலையங்களுடன், பிரான்ஸ் பத்தாவது இடத்தில் இருக்கிறது.