அன்சன் பால், ரெபா மோனிகா ஜான், ராஜா உட்பட பலர் நடித்துள்ள படம், ‘மழையில் நனைகிறேன்’.டி.சுரேஷ் குமார் இயக்கியிருக்கும் இந்தப் படத்தை ராஜ்ஸ்ரீ வென்சர்ஸ் சார்பில் பி.ராஜேஷ் குமார் மற்றும் ஸ்ரீவித்யா ராஜேஷ் தயாரித்துள்ளனர். விஷ்ணு பிரசாத் இசை அமைத்துள்ளார். கல்யாண் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படம் வரும் 12-ம் திகதி வெளிவருகிறது.
படம் பற்றி இயக்குநர் டி.சுரேஷ்குமார் கூறும்போது, “இது காதல் கதையை கொண்ட படம். ஏற்கெனவே பல காதல் கதைகளைப் பார்த்திருந்தாலும் இது அதிலிருந்து வித்தி யாசமாக இருக்கும். படத்தின் கிளைமாக்ஸ் காட்சிப் பேசப்படுவதாக இருக்கும். மழைக்கும் இந்தக் கதைக்கும் தொடர்பு இருப்பதால் இப்படி தலைப்பு வைத்துள்ளோம். மழையில் தொடங்கும் படம் மழையிலேயே முடியும். ரெபா மோனிகாவுக்கு இது முக்கியமான படம். சிறப்பாக நடித்திருக்கிறார். தயாரிப்பாளர், ரஜினி சாரின் நண்பர் என்பதால் இந்தப் படத்துக்கு வாழ்த்து தெரிவித்து அவர் வீடியோ வெளியிட்டுள்ளார்” என்றார் .