கீர்த்தி சுரேஷ் மலை யாள முன்னணி தயாரிப்பாளரான சுரேஷின் மகள். இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளனர். வளர்ந்த பின்னர் கதாநாயகியாகவும் நடிக்கத் தொடங்கினார். தமிழில் அவரின் முதல் படம் ஏ எல் விஜய் இயக்கிய ‘இது என்ன மாயம்’ திரைப்படம்தான். அதன் பின்னர் வெளியான ரஜினி முருகன் படம் அவரை முன்னணி நடிகையாக்கியது.
இப்போது தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு நிலையான மார்க்கெட் வைத்திருக்கும் நடிகைகளில் கீர்த்தி சுரேஷும் ஒருவர். ரஜினி, விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்துள்ள அவர் இடையில் நடிகையர் திலகம் திரைப்படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றார். அதன் பின்னர் பெண்குயின், சாணிக் காயிதம் மற்றும் ரகு தாத்தா போன்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் கதைகளிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் தன்னுடைய காதலர் ஆண்டனி தட்டில் என்பவரை மணக்கவுள்ளார். இப்போது அவர் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.