13
நிலவில் மனிதன் இறங்கி
சென்ற ஆண்டுகள் பல
நிலவைப் பார்த்து இன்றும்
மனிதன் புனைகிறான் கவி
நாய்கள் குரைக்கின்றது
பௌர்ணமி நிலவைப் பார்த்து
எட்டாத உயரத்தில் ஜொலிக்கும்
அதனில் பொறாமை கொண்டு
முழுநிலவின் ஒளியைப்போல்
உயர்ந்து நின்று பிரகாசிக்கும்
உத்தமர்கள் சிலர் நம்முலகில்
உவந்தளித்த உண்மைகள் பல
ஒளிவீசிப் பிரகாசிக்கும் அவர்கள்
உரைத்த மானிட நேசத்திற்கான
உயர்ந்த கருத்துக்களை இன்றுசில
பதர்கள் புறந்தள்ளுவர் புகழுக்காக