15
எத்தனங்கள் எதுவும்
ஏற்றி விடவில்லை..
சந்தங்கள் காதில்
சுகமாய் விழவில்லை..
சித்திரங்கள் கண்ணுக்கு
குளிர்ச்சியைத் தரவில்லை..
விசித்திரங்கள் உள்ளுக்குள்
வியப்பாய்த் தெரியவில்லை..
தொட்டுணரும் எதிலும்
மென்மையைக் கண்டதில்லை..
—
விட்டகலும் குணங்களை
சட்டை செய்ததில்லை..
வாசங்களை நுகரும்
வாய்ப்புக்கள் எட்டவில்லை..
தேசத்தின் அதிசயங்கள்
தேனாய் இனிக்கவில்லை..
ஒருபிடி சோறு
பசியை அணைக்கவில்லை..
உழைப்புக்கான ஊதியம்
உள்ளத்தை நனைக்கவில்லை..
வாழ்க்கைப் பயணம்
பூக்களால் நிரம்பவில்லை..
வாடிய மலர்களுக்கோ
மண்ணில் இடமில்லை…