21
தொப்புள் கொடி
உறவிது என்றும்
துயரென்றால் துடித்திடுமே
நேசம் வென்றும்
கூட்டுக் குடும்பமாய்
களிப்புற்றதே சான்றும்
நகமும் சதையுமாய்
வாழ்கின்றோம் இன்றும்
துன்பம் விரண்டோட
இன்பத்தில் மிதந்தோம்
துயரைத் துடைக்க
முந்தியே சிறந்தோம்
கண்ணீரென்றால்
ஆனந்த(க்)
கண்ணீரில் உறைந்தோம்
உறவுச் சங்கிலிகளின்
பாசத்தால் நிறைந்தோம்..!