நடிகை ஐஸ்வர்யா லட்சுமி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, மேட்ரிமோனியல் தளத்தில் பதிவு செய்த நிலையில் அந்த பதிவு போலியானது என்று நினைத்த பலர், அவருடைய பதிவுக்கு எந்தவித பதிலும் சொல்லவில்லை என்று வருத்தப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஷால் நடித்த ஆக்சன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, அதன் பின்னர் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம், மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன், விஷ்ணு விஷால் நடித்த கட்டா குஸ்தி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இந்நிலையில், ஐஸ்வர்யா லட்சுமிக்கு தற்போது 34 வயதாகும் நிலையில் அவர் தனது தாயாரிடம் சொல்லி, மேட்ரிமோனியல் இணையதளத்தில் பதிவு செய்தார். இதனை அடுத்து, அவரது விவரங்கள் மேட்ரிமோனியல் தளத்தில் இடம்பெற்ற நிலையில், பலர் அதை போலியானது என்று நினைத்து, அவருக்கு யாருமே பதில் அனுப்பவில்லை என்று கூறி வருத்தப்பட்டுள்ளார்.
“திருமணத்தில் எனக்கு நம்பிக்கை இல்லாமல் இருந்தது. ஆனால் வளர வளர எனது பார்வை மாறி, தற்போது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளேன். திருமண வாழ்க்கையில் ஒரு சிலர் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்கின்றனர். கடந்த ஒரு வருடத்தில் ஒரே ஒரு குடும்பம் மட்டுமே மகிழ்ச்சியாக வாழ்வதை கண்டேன். இந்த நிலையில், தற்போது தான் திருமண வாழ்க்கை பற்றி உணர்ந்து, மேட்ரிமோனியல் இணையதளத்தில் பதிவு செய்து உள்ளேன்,” என்று அவர் கூறியுள்ளார்.