நவலோக உயர் கல்வி நிறுவனமும் (NCHS), Swinburne தொழில்நுட்ப பல்கலைக்கழகமும் தசாப்தத்திற்கும் மேலான நீண்டகால உறவினை கொண்டாடும் விதமாக அதன் 2024 பட்டமளிப்பு விழாவை அண்மையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்தியது. 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டம் பெற்ற இந்த நிகழ்வு, NCHS மற்றும் Swinburne இடையேயான வலுவான உறவின் சிறப்பம்சத்தை பிரதிபலிக்கும் தருணமாகவும் அமைந்தது.
இலங்கை முழுவதிலுமுள்ள மாணவர்களுக்கு தரமான, சர்வதேச அங்கீகாரம் பெற்ற கல்வியை வழங்குவதற்கான NCHSஇன் பயணத்தையும் அதன் சிறப்பான சேவைகளையும் அங்கீகரிக்கும் விதமாக இந்த பட்டமளிப்பு விழா நடைபெற்றது. NCHSஇன் கொழும்பு மற்றும் கண்டி கல்லூரிகள் மூலம் இந்நாட்டு மாணவர்களின் கனவுகளை நனவாக்க அர்ப்பணிப்புடன் செயல்படுவதுடன், சர்வதேச தரத்திற்கு ஏற்ற கற்றல் சூழலை அவர்களுக்கு வழங்குவதில் மிகப் பெரிய வரவேற்பையும் பெற்றுள்ளது.
இலங்கையின் கல்வித்துறையில் முக்கிய மைல்கல்லை குறிக்கும் கடந்த பத்தாண்டு கால வரலாறு பற்றி கருத்து தெரிவித்த NCHSஇன் தலைவர் கலாநிதி ஜயந்த தர்மதாச, ‘அவுஸ்திரேலியாவின் Swinburne தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் இந்நாட்டின் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு கல்விக் கனவுகளை நனவாக்கும் வாய்ப்பை வழங்கிய பத்தாண்டு கால கூட்டாண்மையால் இந்த ஆண்டின் பட்டமளிப்பு விழா மிக விசேட தருணமாக அமைகிறது. ‘ என்று குறிப்பிட்டார்.