Home » அங்கீகாரமற்ற போலியான 3M தயாரிப்புகளை வாங்குவதால் ஏற்படும் ஆபத்துகள்

அங்கீகாரமற்ற போலியான 3M தயாரிப்புகளை வாங்குவதால் ஏற்படும் ஆபத்துகள்

எச்சரிக்கும் 3M-MLL

by Damith Pushpika
November 24, 2024 6:30 am 0 comment

இலங்கையில் 3M தயாரிப்புகளுக்கான பிரதான விநியோகஸ்தரான McLarens group (3M-MLL) நிறுவனம், உண்மையான 3M தயாரிப்புகளுக்கான நிறுவனம் என்பதை உறுதிப்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பது தொடர்பான அதன் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

அங்கீகரிக்கப்படாத 3M தயாரிப்புகளை கொள்வனவு செய்வதும் பயன்படுத்துவதும் பல்வேறு கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்பதோடு, போலித் தயாரிப்புகளுக்கு பெரும்பாலும் உத்தரவாதங்கள் இல்லை என்பதால், நுகர்வோருக்கு எவ்விதமான உதவியோ அல்லது முறைப்பாடோ செய்ய முடியாது. திருட்டுத்தனமான வகையில் அல்லது அங்கீகாரமற்ற முறையில் கொள்வனவு செய்யப்படும் தயாரிப்புகளை பயன்படுத்துவது, குறிப்பாக தனிநபர் பாதுகாப்பு உற்பத்திகள் உடல்நலத்திற்கும், பாதுகாப்பிற்கும் பல்வேறு ஆபத்துகளை ஏற்படுத்தும். 3M-MLL நிறுவனத்திடமிருந்து 3M தயாரிப்புகளை கொள்வனவு செய்யும் நுகர்வோர் விரிவான உத்தரவாதங்களுடனான உதவியைப் பெறுவதால், அவற்றின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படுகிறது.

நம்பகமான ஆதரவுடன் மிக உயர்ந்த தரம் வாய்ந்த தயாரிப்புகளை நுகர்வோர் பெறுவதை உறுதி செய்ய, தாங்கள் விநியோகிக்கும் ஒவ்வொரு தயாரிப்பிற்கும் நிறுவனம் பொறுப்புக் கூறுகின்றது.

நுகர்வோர் விழிப்புடன் இருக்கவும், 3M தயாரிப்புகளின் நம்பகத்தன்மை தொடர்பான நிபந்தனைகளைப் புரிந்துகொள்ளுமாறும் 3M-MLL நிறுவனம் ஊக்குவிக்கிறது. போலியான தயாரிப்புகளை அசல் தயாரிப்புகளிலிருந்து வேறுபடுத்துவது கடினம் என்பதையும், அவற்றைப் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் கடுமையானவை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division