16
பரிசளிப்பின் பரபரப்பில்
கரிமனத் திருடனால்
களவு போன மிதிவண்டி!
கடமையினை
மறந்து விட்ட
காவலர் அரண்மனையில்
தவமிருந்து முறைப்பாடு!
மிதி வண்டிக் கடனின்
மீதியை வழங்க முன்பே
வீதியோரம் இழந்து
வந்த மகன்..!
‘நீயும் தொலை’ என்று
சீறி அடித்து அழும்
கூலித் தாயின் வறுமை!
பள்ளி போக வழியில்லை!
மாலை வகுப்பு
இனியில்லை!
காலை வாரிய களவு…!