தினகரன், தினகரன் வாரமஞ்சரி பத்திரிகைகளின் கொழும்பு மாவட்டத்தின் பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை பிரதேசங்களுக்கான பத்திரிகை விற்பனையை மேம்படுத்தும் (Promotion) வேலைத்திட்டம், பம்பலப்பிட்டி சம்மாங்கோடு அருள்மிகு மாணிக்கப் பிள்ளையார் கோவிலில் விசேட பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது. லேக்ஹவுஸ் நிறுவனத் தலைவர் காமினி வருஷமான தலைமையில் ஆசிரிய பீடப் பணிப்பாளர் சிசிர யாப்பா, நிதிப் பணிப்பாளர் சன்ன கெவிட்டியாகல, பொது முகாமையாளர் சுமித் கொத்தலாவல, நிறுவனச் செயலாளர் சுதர்ஷனி காரியவசம், தினகரன், தினகரன் வாரமஞ்சரி பிரதம ஆசிரியர் தே. செந்தில் வேலவர் உட்பட நிறுவனத்தின் முக்கியஸ்தர்கள் பலரின் பங்குபற்றுதலுடன் இந்நிகழ்வு நடைபெற்றது. ஆரம்ப நிகழ்வில் ஆலய அறங்காவலர் சபை தலைவர் அருணாசலம் பிள்ளை மாணிக்கவாசகர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
கொழும்பில் தினகரன் வீதி உலா
98
previous post