Home » 5G செயற்படுத்தலை இலகுவாக்கும் SpideRadio Telecom தள நிலையங்கள்

5G செயற்படுத்தலை இலகுவாக்கும் SpideRadio Telecom தள நிலையங்கள்

by Damith Pushpika
November 10, 2024 6:00 am 0 comment

உலகின் அணுகல் வலையமைப்பு தீர்வுகள் தொடர்பான துறையில் புதிதாக நுழைந்துள்ள SpideRadio Telecommunication Technology Co. Limited நிறுவனத்துடன் Hyperjet Technologies Sri Lanka நிறுவனம் கூட்டாண்மையொன்றை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் டிஜிட்டல் துறையில் 5G இன் சாத்தியக்கூறுகள் தொடர்பாக புரட்சியை ஏற்படுத்தும் SpideRadio நிறுவனத்தின் தொலைத்தொடர்பு தயாரிப்புகளை அந்நிறுவனம் இலங்கையில் அறிமுகப்படுத்துகின்றது.

இலங்கையின் அனைத்து தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்துனர்கள், கையடக்கத் தொலைபேசி தொலைத்தொடர்பு வலையமைப்பு சேவை வழங்குனர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கும் இது ஒரு உற்சாகமான வாய்ப்பாக அமையுமென, Hyperjet Technologies உறுதியாக நம்புகிறது. புரோட்பேண்ட் மூலம் பொருளாதார வளர்ச்சியை செயற்படுத்தும் டிஜிட்டல் பிரிவைக் குறைத்து, 5G தொழில்நுட்பங்களில் தனது வலையமைப்புத் திறனை மேம்படுத்தும் இலட்சியத்தை இலங்கை கொண்டிருப்பதால், SpideRadio நிறுவனத்தின் வலையமைப்பு தர நுண்ணறிவு (carrier-grade Intelligent) மூலம் கம்பியற்ற தொலைபேசி வலையமைப்பிற்கான அணுகல் வலையமைப்பு தீர்வுகள் தொடர்பான தயாரிப்புகள், கையடக்கத்தொலைபேசி தகவல்தொடர்பாடல் தயாரிப்புகளுக்கான தெற்காசிய சந்தையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் வாய்ப்பைக் கொண்டுள்ளன.

4G மற்றும் 5G Radio Access Network (RAN) தயாரிப்புகள் மற்றும் தீர்வுகள், முக்கிய வலையமைப்புத் தீர்வுகள், ஸ்மார்ட் தொழிற்சாலைகள், ஸ்மார்ட் தொழில்துறைகள் மற்றும் பல்கலைக்கழக பயன்பாடுகள் போன்றவற்றிற்கான தனியார் வலையமைப்புகள் மூலம் வலையமைப்பு அணுகலுக்கான விரிவாக்கம் மற்றும் தெளிவுத்திறன் மேம்பாடு ஆகிய விடயங்கள் தொடர்பான தீர்வுகளை வழங்க SpideRadio எதிர்பார்க்கிறது.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division