18
பூமிப் பந்தின்
சுழற்சியின் நிமித்தம்
பூவுலகில் மனிதன்
வாழ்க்கை நித்தம்
புரவியெனப் புறப்பட்டு
விரைவதிலே கவனம்
புவனத்தில் அவனுக்கு
வாய்த்திடவே சுவனம்
மாற்றத்தின் பின்னே
மனிதமும் மறந்து
ஏற்றம் உண்டென
நம்பி ஏமாந்து
சுற்றமும் கசந்து
நவீனத்தில் மிதந்து
அற்றம் நோக்கிச்
செல்கிறான் அமிழ்ந்து
கால மாற்றத்தில்
கொள்கையும் வேறுபடும்
கோல விகாரத்தை
ஞாலமும் கூறிவிடும்
காலும் கையும்
வலுவை இழக்கும்
கோலும் பிடித்தால்
ஞானம் பிறக்கும்
சக்கர வடிவம்
காலத்தின் பயணமே
ஒக்கலின் அர்த்தம்
உணர்த்தும் தருணமே
உக்கிடும் எல்லா
நிலையில்லா ஆக்கமே
திக்கெங்கும் உறுதியாய்
இறையின் பக்கமே