19
நீ…
நாளை நதியாக பிரவகிக்க வேண்டும்…
குமுறிய எரிமலையாய் இருந்தது போதும்…
வெடித்துச் சிதற வேண்டும்…
உனை நோக்கி வரும் அம்புகளை…
அன்பாலோ வம்பாலோ
தகர்த்தெறிய வேண்டும்…
நீ…
நீயாக நாளை
உன் வாழ்வை துவங்க வேண்டும்….
மாசு படாத உள்ளத்தை
உனதாக்கிக் கொள்ள வேண்டும்…
நீ..
துவண்டிருந்தால்…
துவைத்துக் கிழித்தே விடும்
இவ்வுலகு…
தூசு தட்டி
துவங்கிடு உந்தன் வாழ்வை…
அதோ வெகுதூர வானம்..
அதை நீ நினைத்தால் தொட்டும் விடலாம்…
சிறகின் சிறுகாயம்
வான் பரப்பை சுறுக்கிடுமா என்ன…