மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் தனது கதாபாத்திரங்களுக்கு பெயர் பெற்ற நடிகை அஞ்சு, பலரின் இதயங்களைக் கவர்ந்தவர். சென்னையில் தனது கல்வியை முடித்து, அங்கு தனது மாடலிங் வாழ்க்கையையும் தொடங்கினார். மாடலிங் மூலம் தான் திரையுலகில் நுழைந்தார்.2013 ஆம் ஆண்டு வெளியான ‘நேரம்’ படத்தின் மூலம் நிவின் பாலியின் தங்கையாக அஞ்சு நடித்தார். அதன்பிறகு, ஓம் சாந்தி ஓஷானா’, பிரேமம், ‘ஞான் பிரகாசன்’, ‘கவி உத்தேசிச்சது..? போன்ற பிரபலமான தலைப்புகள் உட்பட சுமார் பத்து படங்களில் அவர் நடித்துள்ளார்.இந்நிலையில் நடிகை அஞ்சு குரியன் ரோஷன் என்பவரை திருமணம் செய்ய உள்ளார். இவர்களுக்கு சமீபத்தில் நிச்சியதார்த்தம் நடைபெற்றுள்ளது. அந்த அழகான தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் ஷேர் செய்துள்ளார். ரசிகர்கள் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அஞ்சு குரியனுக்கு சைலண்டாக நடந்த நிச்சியதார்த்தம்!
21
previous post