இலங்கையின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான Prime Group, பெருமைக்குரிய “இலங்கையின் சிறந்த தொழில் வழங்குநர் வர்த்தக நாம விருது” இனை சுவீகரித்துள்ளது. 19ஆவது தொழில் வழங்குநர் வர்த்தக நாம விருதுகள் 2024 நிகழ்வின் போது இந்த உயர் கௌரவிப்பைப் பெற்றுக் கொண்டது. மனித வளங்கள் அபிவிருத்தி மற்றும் ஊழியர் நலன்பேணலுக்கான அர்ப்பணிப்பை கௌரவித்தும், நேர்த்தியான மற்றும் ஊக்குவிக்கும் பணிச்சூழலை ஏற்படுத்திக் கொடுத்தமைக்காகவும் இந்த உயர் கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றது.
இலங்கையின் சிறந்த தொழில் வழங்குநர் வர்த்தக நாம விருதுகளுக்கு மனித வளங்கள் தலைமைகளின் சர்வதேச கட்டமைப்பான World Federation of HR Professionals மற்றும் World HRD Congress ஆகியவற்றினால் சான்றளிக்கப்பட்டுள்ளது. அண்மைய சர்வதேச சவால்களுக்கு மத்தியில், மனித வளங்கள் செயற்பாடுகளில் சிறப்பை பின்பற்றியிருந்த நிறுவனங்களை கொண்டாடும் வகையில் அமைந்துள்ளன. நிறுவனத்தின் வெற்றிகரமான செயற்பாடுகளின் பிரதான அரணாக கருதப்படும், ஊழியர்கள் மீது Prime Group கொண்டிருக்கும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில் இந்த விருது அமைந்துள்ளது. சிறந்த ஊழியர் அனுபவத்தை பெற்றுக் கொடுப்பதில் Prime Group இன் ஆற்றலை வரவேற்பதாக இந்த விருது அமைந்திருப்பதுடன், நிறுவனத்தின் நோக்கை நோக்கி பயணிக்கையில் அதில் அங்கம் பெறுவதையிட்டு ஊழியர்கள் பெருமையாக உணர்வதை உறுதி செய்வதாகவும் அமைந்துள்ளது.