55
பரந்தன் பகுதியிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று நேற்று சனிக்கிழமை அதன் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
இந்நிலையில் மேற்படி மோட்டார் சைக்கிள் கடைக்குள் நுழைந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
புதுக்குடியிருப்பு நகர் பகுதியிலுள்ள நகை கடையொன்றுக்குள் அக்கடை கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு நுழைந்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணையை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.
(ஓமந்தை விசேட நிருபர்)