புகழ்பெற்ற கல்வியியலாளரும் எழுத்தாளரமான பிரேம் ராவத் எழுதிய “உள்ளத்தின் குரல்” புத்தக்கத்தின் அறிமுகம் கொழும்பு 06 சவோய் திரையரங்கு முன்பாகவுள்ள, இல.7-7/1, ஒர்சாட் கட்டட தொகுதியில் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
“உள்ளத்தின் குரல்” என்ற இப் புத்தகம் நமது வாழ்க்கையின் இரைச்சலை எவ்வாறு அமைதிப்படுத்துவது, நமது தனித்துவமான உண்மையான குரலைக் கேட்பது எவ்வாறு என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.
உள்ளத்தின் குரல் நூல் ஒருவரின் புரிதல், வாழ்க்கை மற்றும் சுற்றியுள்ளவர்களது வாழ்க்கையை மாற்ற கூடியதாக அமைந்துள்ளது. இந்த அற்புதமான, விவேகம் நிறைந்த நூலில் பிரேம் ராவத், வெளிச் சத்தங்களை குறைத்து எவ்வாறு நாம் எமது உள்ளத்தின் குரலை கேட்பது என்பது பற்றி கற்பிக்கின்றார்.
தனது வாழ்நாள் முழுவதையும் அமைதிக்காக அர்ப்பணித்த பிரேம் ராவத், கடந்த 55 வருடங்களுக்கும் மேலாக, மிகுந்த அர்ப்பணிப்பு, ஞானம் மற்றும் நகைச்சுவையுடன் தனது செய்தியை 100 க்கும் மேற்பட்ட நாடுகளிலுள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு வழங்கியுள்ளார். அவரது உலகளாவிய உரைகளின் சாராம்சத்தை இப் புத்தகத்தில் காணலாம்.