Home » 21 ஆம் நூற்றாண்டுக்கு ஏற்றவகையில் உருவாக்குவதே எதிர்கால நோக்கம்
இலங்கையின் சட்டத் தொழிலை

21 ஆம் நூற்றாண்டுக்கு ஏற்றவகையில் உருவாக்குவதே எதிர்கால நோக்கம்

சட்டத்துறையில் 38 வருட கால அனுபவத்தைக் கொண்ட கலாநிதி சுனில் அபேயரத்னவுடனான சந்திப்பு

by Damith Pushpika
October 13, 2024 6:25 am 0 comment

“நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்வதற்கும் உலகளாவிய நிலைகளிலிருந்து வழிகாட்டுதல்களைபெற்று, இலங்கையின் சட்டத் தொழில் 21 ஆம் நூற்றாண்டுக்கு ஏற்றதாக இருப்பதை உறுதி செய்வதற்கும் சட்ட தொழிலுக்கு புதிய வழிகளை திறப்பதற்கும் அவர் முனைப்புடன் பணியாற்றவுள்ளார்.

அத்துடன், சங்கத்தின் இளைய உறுப்பினர்களுக்கு இந்த உன்னதமான தொழிலில் முன்னேறுவதற்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் அவர் சிறந்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்”

சட்டத்துறையில் 38 வருட கால அனுபவம் வாய்ந்த சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் செயலாளர் கலாநிதி சுனில் அபேயரத்ன இம்முறை நடைபெறவுள்ள சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளார். இலங்கையின் சட்டத்துறைக்கு அளப்பரிய சேவை செய்துள்ள அவர், பல்வேறு சர்வதேச நாடுகளிலும் அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். சட்டத்துறையில் அவரின் சேவை தொடர்பாக அவருடன் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல் இது.

சட்டத்துறையில் தொடர்ச்சியாக பணியாற்றி வரும் கலாநிதி சுனில் அபேயரத்ன, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) 2025- 2026 ஆம் ஆண்டுக்கான தலைவர் பதவிக்காக போட்டியிடவுள்ளார்.

சுனில் அபேயரத்ன கடந்த 2006- 2008 காலத்தில் சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனையடுத்து வலயத் துணைத் தலைவர், நிறைவேற்றுக்குழு உறுப்பினர், செய்தி மடல் ஆசிரியர் மற்றும் சட்ட இதழ் உதவி ஆசிரியராகவும் 1997– – 2006 வரையான காலத்தில் பணியாற்றியுள்ளார்.

பார் கவுன்சில் உறுப்பினராக கடந்த 36 வருடங்களில் தொடர் சட்டக்கல்வி, தேசிய சட்ட மாநாடு மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டக் குழு ஆகியவற்றின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

இலங்கையில், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் முன்னோடியாகத் திகழும் கலாநிதி அபேயரத்ன, கொழும்பு பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் முதலில் கலாநிதி பட்டத்தைப் பெற்றுள்ளதுடன் பல்வேறு கல்வி சார் சாதனைகளையும் படைத்துள்ளார்.

அவர், லண்டன் பல்கலைக்கழகத்தின் குயின் மேரி கல்லூரியில் LLM பட்டத்தையும் இந்திரா காந்தி தேசிய திறந்த பல்கலைக்கழகத்தில் MBA பட்டத்தையும் கொழும்பு மருத்துவ பீடத்தில் தடயவியல் மருத்துவம் அறிவியல் மற்றும் நச்சியல் டிப்ளோமாவையும் பெற்றுள்ளார்.

கலாநிதி அபேயரத்ன 1986 ஆம் ஆண்டு சட்டத்தரணியாக பதிவு செய்துள்ளதுடன் சிவில் குற்றவியல் வர்த்தக மற்றும் பொதுச் சட்டங்களை மேன்முறையீட்டு மற்றும் முதல் நிலை நீதிமன்றங்களில் நடைமுறைப்படுத்துவதில் புகழ்பெற்றவராக திகழ்ந்துள்ளார்.

நிமல் சேனநாயக்க பி.சி. (BASLஇன் முன்னாள் தலைவர்) தயா பெரேரா பி.சி மற்றும் திவங்க விக்கிரமசிங்க பி.சி உட்பட சட்டத்துறையில் குறிப்பிடத்தக்க நபர்களின் கீழ் அவரது சட்டப் பயணம் ஆரம்பித்தது.

அவரது கல்வி சாதனைகள் லண்டனிலுள்ள வணிகச்சட்ட ஆய்வுகள் மையத்திலிருந்து தகுதி வாய்ந்த சர்வதேச வர்த்தக நடுவராக விரிவான நீதிமன்ற அனுபவத்தை நிறைவு செய்கின்றன.

அவர் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளராக செயற்பட்ட காலத்தில் ஒரு தேசிய திட்டமான ‘சட்ட வாரம்’ என்ற நிகழ்ச்சியை தொடங்குவதில் முக்கிய பங்கு வகித்தார். அதற்கு மேலதிகமாக சட்டத்தரணிகள் சங்கத்தின் IT சட்டக் குழுவை அமைத்தல் மற்றும் ஒரு புத்தம் புதிய பாடமாக IT சட்டத்தில் உறுப்பினர்களுக்கு கல்வி கற்பிக்க நாடு தழுவிய தொடர் கல்வி திட்டங்களை நடத்துதல் போன்றவற்றையும் மேற்கொண்டார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division