27
சிற்றெறும்பு ஊர்வது போல்
சீராய்ப் போகும் புகைவண்டி!
ஏற்றம் இறக்கம் எதுவானாலும்
எளிதாய்த் தாண்டும் புகைவண்டி!
சிகுபுகு சிகுபுகு புகைவண்டி
சீறிச் செல்லும் புகைவண்டி
சீமையில் செய்த புகைவண்டி
புகையைக் கக்குது பின்னாடி!
கண்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்
காலம் நேரம் தவறாமல்,
தாண்டிச் செல்லும் புகைவண்டி
தாத்தாக் காலப் புகைவண்டி!