94
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை….
தேடி வரும் வெற்றியின் வாசல்….
ஓடிப் போகும் துன்பமும் துயரமும்….
வாடும் இதயங்களும் ஏன்
ஊனமும் கூட
எழுந்து நிற்கும்…..
இல்லறத்தில் ஒன்று பட்டால்
இமயத்தை தொட்டு விடலாம்…..
சகோதரர்கள் ஒன்றுபட்டால்
சரித்திரங்கள் படைத்து விடலாம்….
நண்பர்கள் ஒன்று பட்டால்
நாட்டைக் கட்டிடலாம்…
காகக் கூட்டங்களின்
ஒற்றுமையைக் கண்டு
மானிடப் பிறவிகள்
மருந்தாக்கிக் கொள்வோம்…..
கறை படிந்த இதயங்களின்
சிறை பிடித்த எண்ணங்களால்
பறை சாற்றும் வேற்றுமைகள்
திரை போட்டு நில்லாமல்
கலைந்தோடும் மேகங்கள் போல
விலகிச் செல்க….,.