19
துலாவில் தண்ணீர்
அள்ளி எடுத்து தனது
துயரங்களை எல்லாம்
மறைத்துக்கொண்டு
சாம்பல் போட்டு தமது
சமையலுக்கான
சட்டி பானைகளை
சுத்தம் செய்கிறாள்
சுமைதாங்கியாக தனது
குடும்பத்தை நாளும்
பராமரிக்கும்
வாடிவதங்கிய
அந்த ஏழை
தாயொருத்தி
பூமிதனில் நாம்காணும்
விஞ்ஞானத்தின்
அசுர வளர்ச்சி
அவள் போன்ற
ஏழைகளுக்கு
எப்படி எட்டும்
–